பட்டாசு தொழிற்சாலையில் தீ பரவல் : ஒருவர் காயம்!

9 0

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆடிஅம்பலம் பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக  கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ பரவல் நேற்று புதன்கிழமை (11) பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலில் காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் மஹியங்கனை பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.கட்டுநாயக்க பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

4விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம்!
களுத்துறை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வஸ்கடுவ பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (9) சுமார் 2330 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவை பெற்றுள்ளார்.

பின்னர் குறித்த சந்தேக நபர், சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.