சட்டவிரோத விலங்கு தோல்களுடன் வர்த்தகர் கட்டுநாயக்கில் சிக்கினார்

10 0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் 37 வயதுடைய வர்த்தகர் ஒருவர் புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டார்.

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், முதலை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வனவகைகளைச் சேர்ந்த 19 உலர்த்தப்பட்ட தோல் பகுதிகள் மீட்கப்பட்டன.

தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளில் மறைத்து கொண்டு வந்த இத்தோல்களை ‘ஆடைகள்’ எனத் தெரிவித்து அதிகாரிகளைத் தவிர்க்க முயன்றும், நுணுக்கமான சோதனையில் அவை கண்டறியப்பட்டன.

சம்பவம் தொடர்பாக வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2 கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது!
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து, 108 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 68 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஜா-எல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.