உயிர் பாதுகாப்பு போன்ற அவசர நிலமைகளுக்கான தொடர்பு இலக்கங்கள்

337 0

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் உயிர் பாதுகாப்பு மற்றும் ஏதேனும் அவசர உதவிகளின் தேவையிருந்தால் உடனடியாக தொடர்பு கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதானியின் அலுவலகத்தின் அவசர தொடர்பு இலக்கங்கள் இரண்டு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி 011 2 674 535 / 011 2 674 502 ஆகிய இரண்டு இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அவசர தேவைகளுக்காக இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.