கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவு சிலை அமைக்கப்படவேண்டும் – அமைச்சர் விஐயகலா

369 0
போரில் பலியான ஊடகவியலாளர்களின் நினைவாக வடக்கில் நினைவுத்தூபி அமைக்கப் படவேண்டும் என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் வல்வெட்டிதுறை குமார் ஆனந்தன் நீச்சல் தடாக நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போது இக்கருத்தினை தெரிவித்தார். அத்துடன் குமார் ஆனந்தனுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் போன்று போரில் பலியான ஊடகவியலாளர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.