முஸ்லிம் அரச பாடசாலைகளுக்கு இன்று முதல் ரமழான் விடுமுறை

242 0

நாட்டின் முஸ்லிம் அரசாங்க பாடசாலைகள் புனித ரமழான் விடுமுறைக்காக இன்று மூடப்படுவது தொடர்பில் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் இன்று முதல் ஜூன் மாதம் 26ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

இதேவேளை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி, தர்ஹாநகர் கல்வியல் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி என்பன நேற்று முதல் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.