மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு (காணொளி)

340 0

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், வீதி நாடகமும் வித்தியாலய சுகாதார கழக பொறுப்பாசிரியர்களான திருமதி எம்.சங்கர், திருமதி கே.யுவராஜா ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் வி.முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

குறித்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், வீதி நாடகமும் மாமாங்க கிராம பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வின்போது உயிர் கொல்லி டெங்குவை ஒழிப்போம், எம்மை டெங்கு நோயில் இருந்து பாதுகாப்போம், எமது

சூழலை டெங்கு அற்ற இடமாக மாற்றுவோம் என்ற வாசகங்களை ஏந்தியவாறு  ஊர்வலத்தில் கலந்துகொண்டதுடன், மாணவர்களின் வீதி நாடகங்களும் இடம்பெற்றன.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.