கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதி(காணொளி)

427 0

வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர்.

இக்கிராம மக்கள் 1999ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டின் பின்னரே மீள்குடியேறிய போதும் இக்கிரமத்தின் பிரதான வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றது.

இது தொடர்பாக குறித்த பகுதி மக்களினால் அரச நிறுவனங்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளிற்கும் அறிவித்த பொழுதும் இதுவரை குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை.

இதனால் அக்கிராம மக்கள் வேறு வழியின்றி தமது வீதியை தாமே திருத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் பற்றைகளை வெட்டி சிரமதானம் செய்துள்ளதுடன் வீதிக்கு கிரவல் இடவுள்ளதாகவும் கோதன்டர் நொச்சிக்குள மக்கள் தெரிவித்துள்ளனர்.