பிரித்தானிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பவுள்ளார்.

207 0

மென்செஸ்ட்டர் தற்கொலைத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களின் படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பவுள்ளார்.

அமெரிக்காவின் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை இந்த படங்களை வெளியிட்டிருந்தது.

இவை எவ்வாறு குறித்த ஊடகத்துக்கு கசிந்தது என்பது குறித்து தெரேசா மேய், டொனால்ட் ட்ரம்பிடம் கேள்விஎழுப்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் ப்ரசல்சில் சந்திக்கவுள்ள நிலையில், இது குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, மென்செஸ்ட்டர் தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு ஒன்று குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மென்செஸ்ட்டரில் இசை நிகழ்ச்சி ஒன்றை அடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் பலியானதுடன், மேலும் 65 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனை நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ள சல்மான் அபேடியின் தந்தையும், இளைய சகோதரரரும் லிபியாவின் ட்ரிபொலி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரது மூத்த சகோதரர் வார்விக் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.