அரசாங்கத்தை வீழ்த்த மிகப்பெரிய சூழ்ச்சி : எவராக இருந்தாலும் கைதுசெய்யப்படுவர்..!

295 0

அடிப்படைவாத, இனவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதன்மூலம் அரசாங்கத்தை வீழ்த்தும் மிகப்பெரிய சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. மக்களை தூண்டிவிடும் அடிப்படைவாதிகள் எவராக இருந்தாலும் அவர்களை கைதுசெய்ய தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.