2026 ஆம் ஆண்டுக்கான வெசாக் போயா தினத்தை மே 30 ஆம் திகதியன்று மாற்றுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல, சியாம் மகா நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர்களும் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர்களும், கரௌயங்கொடை மைத்திரி மூர்த்தி அமரபுர மகா நிகாய மகாநாயக்கர்களும், ஸ்ரீ விமல ஸ்ரீ மக்குன்னாவ மகாநாயக்கர் மகுன்னாவ மகாநாயக்கர்களும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு போயா தினங்கள் வருகின்றன. அதில், தற்போதைய அரச நாட்காட்டியில் மே முதலாம் திகதி வெசாக் தினமாகக் குறிப்பிடபட்டுள்ளது., அன்றைய தினம் அதற்குரிய நட்சத்திர பொருத்தமில்லை. சாஸ்திர ரீதியான ஆலோசனைகளின்படி, சரியான நட்சத்திரம் கூடிவரும் மே 30ஆம் திகதியை உத்தியோகபூர்வ வெசாக் தினமாக மாற்றியமைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்

