சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சாதனை

10 0

ஒரே ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் சாதனை 2026 டிசம்பர் 29 ஆம் திகதியன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

முந்தைய சாதனையான 2,333,796 சுற்றுலாப் பயணிகள் 2018 ஆம் ஆண்டில் வருகைதந்தனர். அந்த சாதனையே முறியடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் 2,333,797 வது சுற்றுலாப் பயணி, திங்கட்கிழமை (29) காலை இலங்கை சுற்றுலா சபையினால் வரவேற்கப்பட்டார்.

2,333,797 வது சுற்றுலாப் பயணியை வரவேற்கும் நிகழ்வு,  சுற்றுலாத்துறை பிரதி  அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்கவின் தலைமையில் விமான நிலையத்தின் “சில்க் ரூட்” பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.

அதன்படி, இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாக 2025 ஆம் ஆண்டு, மாற உள்ளது.

2,333,797 வது சுற்றுலாப் பயணியை  தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் பெலிக்ஸ் பெஸ்லின் பெரேரா ஆவார். அவருடன் அவரது மனைவி, ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை திருமதி ரீனா ஃபெர்டினாண்ட்ஸ் மற்றும் அவர்களின் திருமணமாகாத மகள்  கிறிஸ்டினா பெரேரா ஆகியோர் இருந்தனர்.

அவர்கள் 2029 டிசம்பர் 29 அன்று காலை 11.10 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து UL-162 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.