இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 23/12/2025 அன்று யேர்மனி சித்திவினாயகர் கோயில் நிர்வாகத்தினரின் பேராதரவோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்காலிக குடிசைகளில் வாழும் மூங்கிலாறு, கைவேலி, குரவயல் கிராமங்களைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு கூரை விரிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வுதவியினை வழங்கிய யேர்மனி சித்திவினாயகர் கோயில் நிர்வாகத்தினருக்கு முல்லைத்தீவு மக்கள் தங்கள் மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.









