காணாமல் போனோர் அலுவலகத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையாளர்கள்?

341 0

Mangala-Samaraweeraகாணாமல்போனோர் அலுவலகத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் போர்க்குற்ற நிபுணர்களாகவே இருப்பார்கள் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.காணாமல் போனோர் அலுவலகத்துக்கு 7 நிபுணர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கத்தேய அரச சார்பற்ற நிறுவனங்களிலும், மேற்கத்தேய அரசாங்கங்களினால் போர்க்குற்ற விசாரணைகளில் ஆனுபவம் பெற்ற நிபுணர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ நியமித்ததைப்போல் தேயிலை, இறப்பர் விற்பனை செய்தவர்களை தூதுவர்களாக நியமித்ததைப்போல் அல்லாமல், இப்பணிக்கு உரிய தகுதிகள் கொண்டவர்களே நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படுவர் எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தபோதிலும், இறுதியில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.