தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு-யேர்மனி

99 0

தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நெற்ரெற்றால் நகரில் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாகப் பொதுச்சுடர்; ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் இடம்பெற்றது.நிகழ்வில் கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்புப் பேச்சு ஆகியன இடம்பெற்றன. இந்நிகழ்வைச் சிறப்பித்த கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேந்தப்பட்;டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.