தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- help for smile யேர்மனி -19.12.2025

143 0

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்குஇன்று 19/12/2025 திருமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்று தொழில் வாய்ப்பில்லாத 100 குடும்பங்களிற்கு  Help for smile யேர்மனிதாயக வாழ் உறவுகளால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி, கோதுமைமா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. பயன்பெற்ற மக்கள் அனைவரும் யேர்மன் வாழ் தாயக உறவுகளிற்கு நன்றி தெரிவித்தனர்.