சாவகச்சேரி வர்த்தக சங்கத்தின் அனுசரனையில் மூன்று வர்த்தகர்கள் சேர்ந்து சாவகச்சேரி றிபேக் கல்லூரிக்கு 300 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இன்றைய தினம் காலை 7:45 மணியளவில் கல்லூரியின் அதிபர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாவகச்சேரி வர்த்தக சங்க செயலாளரும் சிவா ரேடிங்கோ உரிமையாளர் கலாநிதி வை.சிவராசா,லஷ்சுமி இரும்பக உரிமையாளர்,சு.பாக்கியராசா ஸ்ரார் ஹொட்டல் உரிமையாளர் வே.சிவநீதன் ஆகியோர் கலந்து கொண்டு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் வர்த்தக சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

