யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51 கிலோகிராம் 700 கிராம் கஞ்சா மீட்பு

362 0

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோகிராம் 700 கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடற்பரப்பில் நின்ற படகினை பரிசோதனை செய்த போதே கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கஞ்சா பொதிகள் வைத்திருந்தமை தொடர்பில் எவரையும் கைதுசெய்யவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விசாரணையின் பின்னர் கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.