மென்செஸ்ட் தாக்குதல் – ஒருவர் கைது

261 0

இங்கிலாந்தின் மென்செஸ்ட்டர் நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.

அத்துடன், 59 பேர் காயமடைந்நதனர்.

இந்த நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பிரித்தானியா கவற்துறையினர் 23 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

தெற்கு மென்செஸ்டர் பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார் இங்கிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.