யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

303 0

அரச வைத்தியர்கள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனமான தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை எனவும் இதன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.