முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு போலி நாணயங்களை கொடுத்தவருக்கு சிறை

282 0

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகளான துலாங்ஜலி ஜெயக்கொடிக்கு போலி நாணயத்தாள்களை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு ஐந்து வருடங்கள் ​ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றத்தை ஒப்புக் கொண்ட குறித்த நபருக்கு ஐந்து இலட்சம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட துலாங்ஜலிக்கு 20 இலட்சம் ரூபா நஸ்ட ஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 25ம் திகதி கொழும்பு பார்க் வீதியில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்திய இயந்திரத்தை அதுல்கோட்டை பகுதியில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.

அத்துடன், குற்றவாளி 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 503ஐ முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியை துலாங்ஜலி தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடச் சென்ற வேளையே அவை போலியானவை என அறியக்கிடைத்துள்ளது.

இதனையடுத்து, குற்றத்தை ஒப்புக் கொண்ட இவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.