பெரியபோரதீவு மட்பாண்ட தொழிற்சாலையை அபிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதியமைச்சர் அமீரலி.

235 0

பெரியபோரதீவு கிராமத்தில் அமைந்துள்ள மட்பாண்ட தொழிற்சாலையை புணரமைத்து மேலும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மட்பாண்ட தொழிற்சாலையைப் மேலும் அபிவிருதி செய்வதற்காக நான் ஒரு குழு ஒன்றை அமைத்து அந்தக் குழுமூலம் தகவல்களைத் திரட்டி அதனுடான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்.

என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவு கிராமத்திலிருந்து மட்பாண்ட தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை பெரியபோரதீவு மட்பாண்ட தொழிற்சாலையில் வைத்து ஞாயிற்றுக் கிழமை மாலை சந்தித்து அவர்களது குறை நிறைகளை ஆராய்ந்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெரியபோரதீவு மட்பாண்ட தொழில் செய்பவர்கள் அனைவரும் இணைந்து ஒரு சங்கத்தை ஆரம்பித்து அதனைப் பதிவு செய்துகொண்டு இயங்க வேண்டும். அவ்வாறு இயங்கினால் மட்பாண்டக் கைத்தொழிலை மேற்கொள்வதற்கும் அவற்றை மென்மேலும் விருத்தி செய்வதற்கும் நாம் உதவிகளை வளங்க ஏற்பாடு செய்வோம். இதுவரை காலமும் மின்சாமின்றி இயங்கிவரும் இந்த மட்பாண்ட தொழிற்சாலைக்கு அடுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் மட்பாண்ட தொழிலை எக்காரணம் கொண்டும் விட்டுவிட வேண்டாம் எதிர் காலத்தில் நவீனத்துவமான முறையில் இவற்றை மேற்கொள்ளலாம், வெளியிடங்களில் பல வித்தியாசமான வடிவங்களையும், பொருட்களையும், மேற்கொள்கின்றார்கள், அதுபோல் இப்பகுதியிலும் களியைப் பயன்படுத்தி பல வித்தியாசமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இவற்றுக்காக வேண்டிய பயிற்சிகளையும், உள்ளீடுகளையும் எமது அமைச்சினூடாக வழங்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

இவற்றுக்காக வேண்டி இந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும் ஒரு சங்கமாக இயங்க வேண்டும் சங்கமாக இல்லாமல் தனி நபர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் உதவிகளை மேற்கொள்ள முடியாது. இந்த மட்பாண்ட தொழிற்சாலை போன்று இக்கிராமத்தில் தையல் பயிற்சி நிலையம் ஒன்றையும் அமைத்துத்தர நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். என அவர் தெரிவித்தார்.

14 வருடகாலமாக இந்த மட்பாண்ட தொழிற்சாலைக்கு மின்சாமில்லை, சுற்று வேலிகள், இல்லை, இடவசதிகள்போதாது, புதிய கட்டடம் ஒன்று தேவை, சுமார் 150 இற்கு மேற்பட்டோர் இந்த மட்பாண்ட தொழிலை மேற்கொண்டு வருகின்றனார், இவர்களில் பெரும்பாலானோல் விதவைகளாகவுள்ளனர், இவ்வாறானவர்களுக்கு, மூலம்பொருட்களைக் கொள்வவு செய்வதற்கும், உதவிகளை மேற்கொண்டு தரவேண்டும் என இதன்போது பிரதியமைச்சரிடம் மட்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.