மண்சரிவு அபாயம்: கொழும்பு – கண்டி பிரதான வீதி மூடப்பட்டது!

18 0

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி கணேதென்ன பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியில், குறிப்பாக பஹல கடுகண்ணாவை பகுதியில், மண்சரிவு,  அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கொழும்பு – கண்டி பிரதான வீதி, கணேதென்ன பகுதியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.