கடுகண்ணாவையில் வீடு, கடையின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்தது

18 0

கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ள நிலையில், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் பாறைக்கு அடியில் சிக்கிய நிலையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

வீட்டிற்கு அருகில் உள்ள கடை ஒன்றும் பாரிய அளவில் சேதமடைந்துள்ள நிலையில் அதில் பணிபுரிந்தவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பாரிய கல்லுடன் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.