கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

13 0

கொட்டாஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்கு உதவிய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 07ஆம் திகதி துப்பாக்கியுடன் காரில் வந்த ஒருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை குற்றம் குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, வத்தளை தெலஹபாத பகுதியில் வெள்ளிக்கிழமை (21) மதியம் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபரிடம் இருந்து 08 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு குற்ற தடுப்புப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.