ஞானசார தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது

320 0

மல்வத்த பீட விகாரைக்கு முன்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்னெடுத்து வந்த உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பௌத்தர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரி கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை மல்வத்த பீடத்தின் உப மஹாநாயக்கர் திவுல்கும்புர தேரர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஞானசார தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.