சூதாட்ட விடுதியில் போலி நாணய தாள் – ஒருவர் கைது

292 0

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கெசினோ சூதாட்ட நிலையம் ஒன்றில், போலி நாணய தாள்களை பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்த 75, ஆயிரம் ரூபா நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.