நானுஓயா டெஸ்போட் மற்றும் டெஸ்போட் கீழ் பிரிவுகளில் புதிய பாலம் மற்றும் வீதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச சபையின் உறுப்பினர் ரா.திருச்செல்வத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் சமய வழிப்பாட்டுடன் (06) வியாழக்கிழமை நடைபெற்றது.
நுவரெலியா பிரதேச சபையில் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கீழ் நுவரெலியா பிரதேச சபை கிரிமிட்டி வட்டாரத்தில் போட்டியிட்ட ரா.திருச்செல்வத்தின் கோரிக்கைக்கு அமைய 23 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த பாலமும் ,வீதியும் புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டு முழுமையாக நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
மேலும் 2026 ஆம் ஆண்டுக்காக வரவு செலவு திட்டத்தின் நுவரெலியா பிரதேச சபையின் மூலம் ஒதுக்கீடு செய்துள்ள 70 மில்லியன் நிதியினால் பல்வேறுபட்ட புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக பல்வேறுபட்ட புதிய வேலைத்திட்டங்களில் மூலம் பொது மக்களுக்கு புதியதொரு மாற்றத்திற்கான சமிக்ஞையாக இது அமைந்துள்ளது என அனைவராலும் தெரிவிக்கப்படுகிறது.



