வெலிகம பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான வெற்றிடத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதற்காக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, ஒக்டோபர் 22ஆம் திகதி தமது அலுவலகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவே தேர்தல் நடைபெறவுள்ளது.

