ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான பெண்கள் வாக்களிப்பு

328 0

நடந்து முடிந்த ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய பெண்கள் வாக்களிப்பதற்கான அனுமதி கடந்த 1963 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக வழங்கப்பட்டது.

இருப்பினும் வாக்களிப்பதில் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாக்கு பதிவிற்கு 5 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில் 4 கோடி மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர்.

இதற்கமைய சுமார் 70 சதவீதமானவர்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

பழமைவாத மத குருவான இப்ராஹீம் ரைசிக்கும் மிதவாத ஜனாதிபதியான ஹசன் ரூஹானிக்கும் இடையேயே பலத்த போட்டி நிலவியது.

உத்தியோகபூர்வ பெறுபேறுகள் வெளியாகாத நிலையில், ஹசன் ரூஹானியே வெற்றி பெறுவது உறுதி என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹசன் ரூஹானியின் தலைமையிலான நிர்வாகத்தின்போது அமெரிக்காவுடனான உறவு மிக நெருக்கமாகியுள்ளன.

அதேவேளை, 140 நாடுகளில் உள்ள ஈரானியர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.