சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து, நேற்றையதினம் (03.11.2025) காலை சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனம், சாலையில் இருந்து விலகி, மரத்தில் மோதியுள்ளது.
வாகனத்தில் பயணித்த குறித்த நபர், விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

