ரோமில் இடிந்து விழுந்த பழமையான கோபுரம்.. ஒரு தொழிலாளி பலி!

56 0

இத்தாலி தலைநகர் ரோமில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கிய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய ரோமில் அமைந்துள்ள 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

குறித்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி 11 மணிநேர போராட்டத்துக்கு பின்னர், காயங்களுடன் மீட்கப்பட்டார்.

எனினும், அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

 

 

இந்நிலையில், குறித்த நபரின் இழப்புக்கு இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி இரங்கலை தெரிவித்துள்ளார்.