இலங்கை பொருளாதார மீட்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. இவ்வேளையில் சீன நாணயத்தின் மூலமான கொடுக்கல், வாங்கல்களை விரிவுபடுத்துவதானது இலங்கைக்குள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், நிதியியல் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் பங்களிப்புச்செய்யும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீன நாணயத்தை சர்வதேசமயப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் ஸ்தாபிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 80 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் முதல் சர்வதேச நாணயக் கட்டமைப்பானது டொலரை மையப்படுத்திய நாணயமாற்று வீத முறைமையில் இருந்து டொலரை மையப்படுத்திய மிதக்கும் வீத முறைமையாக நிலைமாற்றமடைந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் சமகாலத்தில் சீன நாணயத்தின் பரவலான பயன்பாடானது வெளிநாட்டுக்கையிருப்புக்களின் கட்டமைப்பை பல்வகைப்படுத்துவதற்கும், நாணயமாற்று வீத அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கும், பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டில் நிலையானதும், குறைந்த செலவினத்துடனான கொடுக்கல், வாங்கல்களை ஊக்குவிப்பதற்கும் பெரிதும் உதவும்.
இலங்கை பொருளாதார மீட்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. இவ்வேளையில் சீன நாணயத்தின் மூலமான கொடுக்கல், வாங்கல்களை விரிவுபடுத்துவதானது இலங்கைக்குள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், நிதியியல் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் பங்களிப்புச்செய்யும் என்றார்.

