போதைப்பொருள் அச்சுறுத்தல்: ஜனாதிபதி தலைமையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசியப் பிரச்சாரம் ஆரம்பம்!

31 0

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களின் அச்சுறுத்தலில் இருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய பிரச்சாரத்தின் தொடக்க விழா, ஜனாதிபதியின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (30) சுகந்ததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

போதைப்பொருள் விநியோகத்தை தடுத்தல், போதைப்பொருள் பயன்பாட்டை குறைத்தல், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டில் பரவலாகக் காணப்படும் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாகத் தடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வையிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களை பொலிஸார் ஒட்டினர்.