முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை சந்தைப்படுத்த முடியாத நிலையில் உள்ளார்.
மேற்படி பிரதேசத்தை சேர்ந்த துரை என அழைக்கப்படுகின்ற கமலராஜன் என்ற விவசாயி சுமார் நான்கு ஏக்கர் காணியில் பூசணியை பயிரிட்டுள்ளார். இதற்காக சுமார் நான்கு இலட்சம் வரை செலவும் செய்திருகின்றார்.
இந்த நிலையில் பூசணிக்காய்களை அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக சந்தைக்கு கொண்டு சென்ற போது அவரால் அதனை சந்தைப்படுத்த முடியவில்லை.
ஆரம்பத்தில் கிலோ 20 ரூபாவுக்கு கேட்டுள்ளனர். இப்போது அந்த விலைக்கும் எவரும் கொள்வனவு செய்வதாக இல்லை எனத் தெரிவித்த அவர் சந்தைக்கு கொண்டு சென்ற பூசணிக்காய்களை மீண்டும் வீட்டுக்கொண்டு வந்து குவித்து வைத்திருகின்றார்.
இவை நாளுக்கு நாள் பழுதடைகின்றன எனவும் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவும் விவசாயத்தை கைவிட்டுவிடுவோமா என்ற மனநிலை தோன்றுவதாகவும் தெரிவித்தார்.


