அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு தகுதிபெற்றும் இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள் விரைவா வங்கி கணக்ககை திறந்து அது தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு வழங்க வேண்டும் என நலனோன்பு பயனாளிகள் சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக குறித்த சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக தகுதிபெற்ற பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலாளர் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக தெரிவாகி, இதுவரை வங்கி கணக்கொன்று திறக்காமல் இருக்கும் பயனாளிகள், தங்களுக்கு உரித்தான பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு சென்று, வங்கி கணக்கொன்றை திறப்பதற்குரிய கடிதத்தை பெற்றுக்கொண்டு, அந்த கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி. இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய வங்களில் தங்களுக்கு வசதியான வங்கி கிளை ஒன்றுக்கு சமர்ப்பித்து, அஸ்வெசும நலத்திட்ட பயனாளிகள் வங்கி கணக்கொன்றை திறக்க வேண்டும்.
அதன் பிரகாரம் இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு தகுதிபெற்ற பயனாளிகள் மிக விரைவாக இந்த வங்கி கணக்கை திறந்து, குறித்த வங்கி கணக்கு தகவல்களை பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு வழங்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

