பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த வேண்டுகோள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக பொலிஸ் மாஅதிபருடன் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் கடந்த திங்கட்கிழமை கேட்டிருந்தன.
எவ்வாறு இருந்தபோதும் சபாநாயகர் தற்போது வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், குறித்த கோரிக்கை கடிதம், சபாநாயகர் காரியாலயத்தின் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அது தொடர்பான திகதி ஒன்று வழங்கப்படும் என நம்புகிறோம் என்றார்.

