மதுரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: மதுரையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கோரிப்பாளையம் பால பணிகள் மெதுவாக நடப்பதாக சட்டப் பேரவையில் அமைச்சரிடம் சொன்னேன். ஆனால் அமைச்சர் எ.வ.வேலு, நான் ஃபார்ம் ஹவுஸுக்கு குடிபோய்விட்டதாக பதிலளித்து பிரச்சினையை திசை திருப்புகிறார்.
ஒன்றரை ஆண்டுகளாக என் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்த முடியவில்லை. அந்தளவுக்கு எனது வீட்டின் முன்பே ரோடு படுமோசமாக உள்ளது. நான் ஃபார்ம் ஹவுஸுக்கு எல்லாம் குடிபோகவில்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து கேள்வி கேட்டால் திமுக அமைச்சர்கள் இப்படித்தான் எங்களை தனிப்பட்ட முறையில் கேலி செய்து தவறுகளை சமாளிக்கப் பார்க்கிறார்கள்.

