பெரம்பூர் ஜமாலியா பகுதியில் ரூ.9.64 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம், 76-வது வார்டு குயப்பேட்டையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.5.96 கோடியில் பள்ளி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
1,473 ச.மீ. பரப்பளவில் தரைதளம் மற்றும் 2 தளங்களு டன் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில் 6 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 7 வகுப்பறைகளும், 2-ம் தளத்தில் அறிவியல், இயற்பியல் ஆய்வகங்கள், நூலகம் மற்றும் கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள் ளன. புதிய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்துவைத்தார்.
பள்ளியில் பயிலும் 354 மாணவர்களுக்கு புத்தகப்பை, குடிநீர் பாட்டில், நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்ட தொகுப்பை வழங்கினார். இதைத்தொடர்ந்து, 74-வது வார்டு, பெரம்பூர் ஜமாலியா பகுதியில் மாநகராட்சியின் மூலதன நிதியில் ரூ.9.64 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல்நாட்டினார். இந்த வளாகத்தில் ஏற்கெனவே பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதியதாக வணிக வளாகம் 2,371 ச.மீ. பரப்பளவில் கட்டப்படவுள்ளது.

