தம்புத்தேகமவில் வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்த மூவர் கைது

51 0

தம்புத்தேகம பகுதியில் வீடொன்றினுள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக, கடந்த 13.10.2025 திகதியன்று தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய,  ஞாயிற்றுக்கிழமை (19) மதியம், கொள்ளையடிக்கப்பட்ட தங்கப் பொருட்கள், ஒரு தொலைக்காட்சி மற்றும் திருடப்பட்ட பணத்தில் வாங்கிய தொலைபேசி ஆகியவற்றை அடகு வைத்து பெறப்பட்ட 2 ரசீதுகளுடன், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் ராஜாங்கனை – யாய பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 21, 33 மற்றும் 54 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.