வவுனியாவில் ஒருவர் கைது!

52 0

வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா டிப்போவிற்கு அருகில் வாகனமொன்றில், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உலர்ந்த மீன்களுடன் மறைத்து, கொண்டு செல்லப்பட்ட 359 ஆயிரம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் சந்தேகநபரை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.