கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீமுத்து உயன வீட்டு வளாகத்திற்கு அருகில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் நடத்திய சோதனைக்கமைய, குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது, 9 கிலோகிராம் 555 கிராம் குஷ் போதைப்பொருள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொழும்பு 14 ஐ சேர்ந்த 27 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

