லிபியாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகினார்.

325 0

லிபியாவில் தெற்கு பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 140 பேர் பலியாகினர்.

பலியானவர்களின் பெருமளவானர்வர்கள் பொதுமக்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ அணிவகுப்பு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற வீரர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேணல் கடாபி கொல்லப்பட்டதன் பின்னர் லிபியாவில் பல ஆயுத குழுக்கள் இயங்குகின்றன.
இந்த தாக்குதலும் குழுக்களுக்கு இடையிலான அதிகார பலம் போட்டியில் இடம்பெற்ற ஒன்று என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையே இந்த தாக்குதலை அடுத்து லிபியாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.