முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 108 கிராம் ஐஸ் போதைப்பொருளை தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரவித்தனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (12) உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த நபரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

