தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு திங்கட்கிழமை (13) கொழும்பில் நடைபெற்றது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான அதன் பிராந்திய தலைவராக ஒரு வருட காலத்திற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
78வது பிராந்திய மாநாடு இலங்கையில் திங்கட்கிழமை (13) முதல் புதன்கிழமை (15) வரை நடைபெறும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Dr.TedrosAdhanom Ghebreyesus), இந்த அமர்வில் எட்டு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குநர் கேத்தரின் போஹ்மே, இரண்டு நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிற WHO நிபுணர்கள் மற்றும் தூதர்கள் கலந்துகொள்வார்கள், இங்கு துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் ஆண்டுக்கான சுகாதார நிகழ்ச்சி நிரலை இதன்போது தயார்ப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிராந்திய நிகழ்வின் நோக்கமானது பொதுமக்களின் சுகாதார பிரச்சினைகள் குறித்த திட்டங்களை ஆராய்ந்து, முந்தைய ஆண்டுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் அதே வேளையில், அனைத்து மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்க்கையை வழங்குவதற்கான நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைளை முன்னேடுப்பதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


