குருணாகலில் பன்னல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாகந்துர பகுதியில் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜயவர்தனபுர முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள், 7 பிஸ்டல் ரக தோட்டாக்கள், 12-போர் தோட்டாக்கள் 09 மற்றும் வாள் ஒன்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
கோனவில பகுதியை சேர்ந்த 46 வயதுடைய குறித்த சந்தேக நபர் பன்னல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

