அமைச்சரவையில் மாற்றம்

48 0

அமைச்சரவை மாற்றம் இன்று வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது. 03 புதிய அமைச்சர்களும் 10 புதிய பிரதி அமைச்சர்களும் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அமைச்சரவை அமைச்சர்கள்

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் – பிமல் ரத்நாயக்க 

துறைமுகங்கள், சிவில் விமான சேவை அமைச்சர் –  அநுர கருணாதிலக 

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் – கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்க 

10 பிரதி அமைச்சர்கள்

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் : கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் : டி.பி. சரத்

சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் : எம்.எம். மொஹமட் முனீர்

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் : எரங்க குணசேகர

சுகாதார பிரதி அமைச்சர் : முதித்த ஹன்சக விஜயமுனி

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் : அரவிந்த சேனாரத் வித்தாரண

இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் : எச்.எம். திணிது சமன் குமார

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் : யூ.டி. நிஷாந்த ஜயவீர

வெகுசன ஊடக பிரதி அமைச்சர் : கௌசல்யா ஆரியரத்ன

வலுசக்தி பிரதி அமைச்சர் : எம்.ஐ.எம். அர்கம்