உயர் கல்வி நிறுவனங்களோடு யாழ்.அரச அதிபர் சந்திப்பு

46 0

அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (09.10.2025) மு.ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் கல்விபயிலும் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் அங்கீகாரம் பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் Northern Uni, ICBT, E- SOFT, Cinec campas, ICASL , Aquiens college, ஆகிய நிறுவனங்களில் கல்வியை தொடர்வதற்கு கடன் திட்டத்தின் ஊடாக மாணவர்களை உள்வாங்குதல் தொடர்பாகவும் நல்லூர் பிரதேசத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் Aquiens college, Northern Uni, ICBT, CINEC, E- SOFTஅங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட திறன்அபிவிருத்தி இணைப்பாளர், மற்றும் யாழ்ப்பாணம், நல்லூா், கோப்பாய் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.