2025 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

62 0

2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லெஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லெஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் லெஸ்லோவின் கவர்ச்சியான, தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.