வெள்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். (காணொளி)

249 0

 

வெள்ளவத்தை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

வெள்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்றுக் காலை இடிந்து விழுந்த விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இதேவேளை இடிபாடுகளுக்குள் மேலும் இருவர் சிக்கியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணியில் இராணுவத்தினர், விமான படையினர், பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://youtu.be/BM9MYr1bR-8