ஜேர்மானியர்கள் என்னென்ன விடயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள்

60 0

ஜேர்மானியர்கள் என்னென்ன விடயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள், அவர்களுக்கு அதிகம் பயத்தை ஏற்படுத்தும் விடயங்கள் என்ன என்பதை அறிவதற்காக சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகளில் தெரியவந்த விடயங்களில் முக்கியமான ஒன்று, ஜேர்மன் மக்கள் எதிர்காலம் குறித்து பயப்படுவது குறைந்துள்ளது என்னும் விடயமாகும்.

 

இது ஒரு நல்ல விடயம் என்கிறார் ஆய்வை முன்னின்று நடத்தியவரான Marburg பல்கலையில் அரசியல் அறிவியலாளராக பணியாற்றும் Isabelle Borucki என்பவர்.

பல ஆண்டுகால நெருக்கடிகளுக்குப் பிறகு இந்த விடயம் மனபாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது என்கிறார் அவர்.

மக்கள் தற்போது எதிர்காலம் குறித்த பயம் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்று கூறும் அவர், இன்று, இப்போது என்ன பிரச்சினை என்பதன்மீதுதான் அவர்களுடைய கவனம் உள்ளது என்கிறார்.

பொருளாதாரம் அல்லது விலைவாசி குறித்த பயம் இன்னமும் அதிகமான பயமாக இருந்தாலும், முன்போல், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் எண்ணுவதில்லை என்கிறார் Isabelle.

அதிகம் கவலைப்படுவது இதற்குத்தான்

ஜேர்மானியர்கள் அதிகம் கவலைப்படுவது இதற்குத்தான்: ஆய்வு முடிவுகள் | Reports Says German Top Concern For Cost Of Living

ஜேர்மானியர்களைப் பொருத்தவரை, விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்வதைக் குறித்துத்தான் அதிகம் அவர்கள் கவலைப்படுகிறார்கள் அதிகரித்துவரும் மளிகைப் பொருட்கள் விலை, எரிபொருள் விலை மற்றும் மின்கட்டணம் ஆகியவற்றால், மாதக் கடைசியில் பொருட்கள் வாங்க பணம் இல்லாத நிலை ஏற்படுகிறது என்னும் கவலை அவர்களுக்கு உள்ளது.

ஜேர்மானியர்கள் அதிகம் பயபப்டும் இரண்டாவது விடயம், புலம்பெயர்தல் குறித்தது. அகதிகள் நாட்டில் அதிகமாகிவிடுவார்களோ என்னும் பயம் ஜேர்மானியர்கள் பலருக்கு உள்ளது.

ஜேர்மானியர்கள் பயப்படும் விடயம் என்னும் பட்டியலில், வரிகள் அதிகரிப்பு, வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை ஆகியவற்றுடன், ட்ரம்பின் கொள்கைகளால் உலகம் அபாயகரமானதாக மாறிவருவதாக அவர்கள் கருதுவதும் ஒரு முக்கிய விடயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.